Published : 19 Feb 2021 11:29 AM
Last Updated : 19 Feb 2021 11:29 AM

சரோஜாதேவி, சௌகார் ஜானகி, கௌதம் மேனன், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு 'கலைமாமணி' விருது: தமிழக அரசு அறிவிப்பு

சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை

தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் இன்று (பிப்.19) 42 பேருக்கு அறிவிக்கப்பட்டன.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சரோஜா தேவி

அதேபோல், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி தாணு ஆகியோருக்கும், நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமராஜன்

மேலும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி ஆகியோருக்கும் சீரியல் நடிகர் நந்தகுமார், நகைச்சுவை நடிகை மதுமிதா உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவதர்ஷினி

இசையமைப்பாளர்கள் இமான், தீனா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர்

பின்னணிப் பாடகி சுஜாதா, பின்னணி பாடகர் அனந்து-வுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், எடிட்டர்கள் ஆண்டனி, மோகன், மெல்லிசை கோமகன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி.பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், ஒப்பனைக் கலைஞர்கள் சண்முகம், சபரிகிரிசன் ஸ்டில் போட்டோகிராபர் சிற்றரசன், ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்திரிகையாளர் சபிதா ஜோசப், பிஆர்ஓ சிங்காரவேலு, ஷெனாய் கலைஞர்கள் பல்லேஷ் மற்றும் கிருஷ்ணா பல்லேஷ், தபேலா கலைஞர் வி.எல்.பிரசாத் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x