Published : 25 Jun 2014 10:02 AM
Last Updated : 25 Jun 2014 10:02 AM
திமுகவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களில் தங்களின் வாரிசுகளுக்கு முக்கியப் பதவி களை பெற்றுத் தருவதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயர்நிலை செயல்திட்டக்குழு முடிவின்படி அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று, திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் 34-ல் இருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், திமுக வேட்பாளர் களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றாமல் கட்சிக்கு எதிராக தவறு செய்ததாக மாநிலங்கவை எம்.பி. கே.பி.ராமலிங்கம், தஞ்சை மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கம், தருமபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன், தருமபுரி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் உள்ளிட்ட 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டது.
இதற்கிடையே, கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தங்களது வாரிசு கள் அல்லது உறவினர்களுக்கு மாவட்டச் செயலாளர், பொறுப் பாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்பு களை பெற்றுத்தர முக்கியப் பிரமுகர்கள் முயற்சி மேற்கொண் டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்துக்கு டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, வேலூர் மத்திய மாவட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பெரியசாமியின் மகன் ஜெகன், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு எ.வ.வேலுவின் மகன் கம்பன், விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோர் முக்கிய பொறுப்புகளுக்கான திமுக தலைமையின் பட்டியலில் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல், கோவை மாவட் டத்துக்கு பொங்கலூர் பழனிச் சாமியின் மகன் பைந்தமிழ் பாரி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், கருப்பசாமி பாண்டியன் மகன் வி.கே.பி.சங்கர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ள தாகவும், இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூடி முடிவெடுக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாரிசுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் பதவியை பெற்றுத் தந்துவிட்டு, தங்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளைப் பெறவும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT