Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வட்டங்களில் 1465 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங் கப்படும் என ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரையில் உள்ள வாரி திருமண மண்டபத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இதில் 257 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகள் கண்டறியப்பட்டு முதல்கட்டமாக தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் இறுதி செய்யப்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
அதன்படி, முதல்கட்டமாக மாவட்டத்தில் 8 வட்டங்களில் 1,465 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும். மேலும், பயனாளிகள் அனைவரும் சிரமமின்றி தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இலவச வீட்டுமனைப் பட்டாவை தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் நிலத்தின் தன்மை, உரிமையாளர் குறித்த அனைத்து விவரங்களும் உறுதிசெய்யப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தா்ர. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், டிஆர்ஓ., சதீஷ், வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, வட்டாட்சியர் ஆஞ்சநேயலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT