Published : 07 Nov 2015 02:55 PM
Last Updated : 07 Nov 2015 02:55 PM
தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறையின் கீழ் 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 316 துணை சுகாதாரநிலையங்கள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 11,000 புற நோயாளிகள், 400 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தமி ழகத்தில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் நோயாளிகள், அவர்களை அழைத்து வரும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சிகிச்சை பெற வரவும், உள் நோயா ளிகள் காலை, மாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளவும் பசுமைப் பூங்கா அமைக்கும் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 40 சென்ட்டில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் மனதுக்கு அமைதி யான சூழலை ஏற்படுத்த நிழல் தரும் 100 மரக்கன்றுகள், செடி, கொடிகள் நட்டு, புல்தரை அமைத்து பராமரிக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. உள் நோயாளிகள் நடைபயிற்சி செல்ல நடைபாதை, சிமெண்ட் இருக்கைகள், கால் நடைகள் நுழையாமல் இருக்க பூங்காவைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறியது:
நோயாளிகள் குணமாக மருத்து வர்களின் கனிவான பேச்சு, மருத்து வமனை சுற்றுச்சூழல் மிக முக்கியம்.
தனியார் மருத்து வமனைகளில் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த கோயில், நிழல் தரும் மரங்கள், சிறிய பூங்கா அல்லது பூந்தோட்டம், வார்டுகளில் மருந்து வாசனை, துர்நாற்றம் வீசாமல் இருக்க பேவர் பிளாக், டைல்ஸ், கிரானைட் ஒட்டப்பட்ட தரைத்தளம், குளிரூ ட்டப்பட்ட அறைகள் இருக்கும். மருத்து வமனையின் இந்த சூழலே, நோயாளிகளின் நோயை பாதி குணப்படுத்த உதவியாக இருக்கும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர சிகிச்சை, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் இருந்தும், தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் சுற்றுச்சூழல் இல்லாததால் நடுத்தர மக்கள் வர ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், நடுத்தர, ஏழை நோயாளிகளை ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு வர வைக்கவே இந்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
எல்லா ஆரம்ப சுகாதாரநிலை யங்களிலும் ஏராளமான காலி இடங்கள் உள்ளன. பராமரிப்பு இல்லாத அந்த இடங்களில் பூங்கா க்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT