Published : 17 Feb 2021 09:11 AM
Last Updated : 17 Feb 2021 09:11 AM
புதுச்சேரியின் சிறந்த எதிர்காலம் மக்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்டார். குடியரசுத் தலைவரிடம் முதல்வர் நாராயணசாமி அளித்த புகார் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டது.
இந்நிலையில், தான் நீக்கப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் கிரண் பேடி ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
''புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நான் சேவை செய்ய வாய்ப்பளித்த இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பு மூலம் நான் சிறந்த அனுபவம் பெற்றேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
எனது பணிக்காலத்தில் ராஜ்நிவாஸ் ஊழியர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து மக்கள் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றினர்.
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
The People of Puducherry and all the Public officials. pic.twitter.com/ckvwJ694qq
நான் செய்த பணி புனிதமான கடமை. அரசியலமைப்புக்கு உட்பட்டும், தார்மீகப் பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டுமே நான் எனது கடமைகளை ஆற்றினேன்.
புதுச்சேரி மாநிலத்துக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கைகளிலேயே இருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு நல்வாழ்த்துகள்''.
இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT