Published : 16 Feb 2021 08:08 PM
Last Updated : 16 Feb 2021 08:08 PM

பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் பங்களாவின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடை அகற்றம்

படங்கள்: ஆர்.அசோக்

மதுரை

மதுரையில் காந்தி மியூசியம் சாலையில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பு மிகப்பெரிய வேகத்தடைப் போடப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த வேகத்தடை அகற்றப்பட்டது.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பங்களா காந்தி மியூசியம் சாலையில் உள்ளது. தற்போது இந்த பங்களாவில் மாநகராட்சி ஆணையாளராக இருக்கும் விசாகன் குடும்பத்தோடு வசிக்கிறார்.

இந்தச் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திமியூசியம் போன்ற இடங்களுக்கும், கோரிப்பாளையம் வழியாக பெரியார் நிலையம் செல்வதற்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்தச் சாலையில் மாநகராட்சி அலுவலகம் முன் மிக உயரமாக வேகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்தது. அதனால், கார், இரு சக்கர வாகனங்கள் இந்தச் சாலை வழியாக செல்ல முடியாமல் தடுமாறின.

கார்கள் சென்றால் அதன் நடுப்பகுதி இந்த வேகத்தடைகள் தட்டி சேதமடைந்தன. .வேகத்தடை போடக்கூடிய அளவிற்கு இந்தச் சாலையில் பெரிய போக்குவரத்தும் இல்லை. இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் இந்த வேகத்தடை பற்றி பொதுமக்கள் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்

இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் தன் பங்களா முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை அகற்ற உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், இன்று மாலை அந்த வேகத்தடையைத் தட்டி சாலையை சமநலப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x