Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
தொண்டை மண்டல ஆதீன திருமடத்தின் 233-வது மடாதிபதியாக ஜி.நடராஜன் பதவியேற்றார். இவர் ல திருச்சிற்றம்பல தேசிய ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் என்று அழைக்கப்பட உள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்களில் ஒன்று தொண்டை மண்டல ஆதீன திருமடம். இந்த மடத்தின் 232-வது குருமகா சந்நிதானமாக இருந்து வந்த பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிச. 2-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து 233-வது குருமகா சந்நிதானத்தை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 13 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மடாதிபதியை தேர்வு செய்யும் நிகழ்வு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருமட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஜி.நடராஜன் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் நேற்று காலை இந்த மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்றார். தருமபுர ஆதீன மடத்தைச் சேர்ந்த மத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் தலைமையில் பொறுப்பேற்றார். இவர் ல திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்படுவார். இவர் மடத்தில் உள்ள தெய்வங்களுக்கு பூஜைகளை செய்தார். தற்போது 76 வயதாகும் இவர் கடந்த 1969-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மடத்தின் மூலம் வாரம்தோறும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதல் ஆரம்ப கட்டத்தில் வழங்கப்படும். மடத்தின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்காகும், அதன் பின்னர் உதவிகள் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT