Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM
வருவாய்த் துறை ஆவணத்தில் ஊர் பெயர் இருந்தும் மக்களே வசிக்காத 19 பேச்சில்லா கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
மக்களே வசிக்காமல், வெறும் பெயர் மட்டுமே உள்ள பல கிராமங்கள் தமிழ கத்தில் உள்ளன. அவற்றை பேச்சில்லா கிராமங்கள் என்கின்றனர். வருவாய்த் துறை ஆவணங்களில் மட்டுமே இருக்கும். இந்தக் கிராமங்களில் முற் காலத்தில் மக்கள் வசித்திருப்பர். வறட்சி, வெள்ளம், கொள்ளை நோய், படையெடுப்பு, பெரிய கட்டு மானப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தல், அணை கட்டுதல் போன்ற காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்திருப்பர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தாலுகாவில், திராணியேந்தல், கடம் பன்குளம், இளையான்குடியில் மேலபிடாரிச்சேரி, இடைக்காட்டூர், திருப்பத்துாரில் பட்டாக்குறிச்சி, வடமாவலி, திருப்புவனத்தில் அழகாரேந்தல், தவளைக்குளம், வலையனேந்தல், கருப்பனம்பட்டி, மறக்குளம், காளையார்கோவிலில் பிரண்டைகுளம், தென்மாவலி, மானாம துரையில் காட்டூரணி, வலையரேந்தல், தேவகோட்டையில் சார்வனேந்தல், வன்னான் வயல், தாழனேந்தல், திவான் வயல் ஆகிய 19 கிராமங்கள் உள்ளன.இதேபோல் மாநிலம் முழுவதும் 500-க் கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அனைத்து விவசாயிகள் சங்க மாநிலப்பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: திருப்புவனம் புதூரில் இருந்து 4 கிமீ-ல் இருக்கும் அல்லிநகரம் ஊராட்சி தவளைக்குளம் பேச்சில்லா கிராமமாக உள்ளது. இருபது ஆண் டுகளுக்கு முன் இந்த கிராமம் 50 குடியிருப்புகளுடன் செழிப்போடு இருந்தது. காலப்போக்கில் தொடர் வறட்சியால் விவசாயம் பொய்த்தது. இதனால் அவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
இதேபோல் வறட்சியால் தான் சிவ கங்கை மாவட்டத்தில் பெரும் பாலான கிராமங்கள் பேச்சில்லா கிராமங் களாக மாறியுள்ளன. இதேபோல் மற்ற கிராமங்களில் இருக்கும் நீர்நிலை களையும், விவசாயத்தையும் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் வசிக்காவிட்டாலும் நிலப் பரப்பு உள்ளதால், அப்படியே கிரா மங்களின் பெயர் தொடர்கிறது. அவற்றை ‘பேச்சில்லா' கிராமங்கள் எனக் குறிப்பிடுகிறோம். இன்னும் சில கிராமங்களில் விவசாயம் செய்கின்றனர். கண்மாய்களும் இருக்கின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT