Published : 13 Feb 2021 03:16 PM
Last Updated : 13 Feb 2021 03:16 PM
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரில் 18 பேரின் அடையாளம் தெரிந்தது.
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்தது. ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெயரில் இயங்கி வந்த அந்தப் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று இந்த ஆலையில் வெடிப்பொருட்களுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து நடந்தது. இதில் ஓர் அறை வெடித்துச் சிதற அடுத்தடுத்து 6 அறைகளுக்கு தீ பரவி வெடித்துச் சிதறின.
இந்த கொடூர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 8 பேர் மருத்துவமனைகளில் இறந்தனர். உயிரிழந்த 19 பேரில் 18 பேரின் அடையாளம் தெரிந்தது.
அவர்களின் விவரம் பின்வருமாறு: சந்தியா (20) ஏழாயிரம்பண்ணை, கற்பகவள்ளி (22), நடுசூரன்குடி, நேசமணி (32), மேல புதூர், தங்கலட்சுமி (40), ஏழாயிரம்பண்ணை, பாக்கியராஜ் (45) நடுசூரன்குடி, கருப்பசாஅமி (57), நடுசூரன்குடி, பஞ்சவரணம் (57) படந்தை. இவர்கள் அனைவரின் உடல்களும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கோபால் (30), படந்தை. இவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவசகாயம் (27) பணையடிப்பட்டி, காளியப்பன் (30) மார்க்கநாதபுரம் ஆகியோரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
வசந்தி (45) நடுசூரன்குடி, ப்ரூஸ்லி (40) அம்மர்பாளையம், கருப்பசாமி (28) படந்தை ஆகியோரின் சடலங்கள் சாத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ரவிச்சந்திரன் (58), சத்தரப்பட்டி, ஜீவா (36), மார்க்கநத்தபுரம், ரெங்கராஜ் (57) மேட்டுப்பட்டி, செல்வி (40), நடுசூரன்குடி, கண்ணன் (48), படந்தை, தனலட்சுமி (45), சாத்தூர், உஷா (35), சின்னகோலப்பட்டி, சங்கர நாராயணன் (60),படந்தை ஆகியோரின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர சிவகாசி அரசு மருத்துவமனையில் ஓர் ஆண் சடலம் அடையாளம் காணப்படாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT