Published : 13 Feb 2021 01:56 PM
Last Updated : 13 Feb 2021 01:56 PM

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கை:

"அரியலூர் மாவட்டம், இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அண்ணாதுரை;

சென்னை பெருநகர காவல் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கி. ராஜூ, தலைமைக் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த பெ. செந்தில்குமார் மற்றும் எஸ். சுதாகர்;

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப.ராபர்ட்;

சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வே.அமுதன்;

புளியந்தோப்பு போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க.யுவராஜ்;

ஆயுதப்படை 'ஈ' நிறுமம், 19ஆம் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க.அன்பரசன்;

திருமுல்லைவாயல் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த புருஷோத்தமன்;

எஸ்.ஆர்.எம்.சி. போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப.அசோக்;

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுதா;

ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப.சரவணகுமார்;

புழல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கலியமூர்த்தி;

அடையாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ம.துரைராஜ்;

சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பா.முருகன்;

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு.இளையராஜா;

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. ராஜன்; தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.ராஜப்பா;

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுரேஷ் குமார்;

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த த. சந்திரசேகர்;

குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கி.வேலுமணி;

மதுரை மாநகர், உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த என். உமாசங்கர்;

கூடல்புதூர் காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த க.க. துரை;

மாநகர ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.மூர்த்தி;

மதுரை மாவட்டம், மேலவளவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பெ.மகாராஜன்;

மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த கா.செந்தில்முருகன்;

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த த. ரவிச்சந்திரன்;

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி.முரளிதரன்;

புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கா. அண்ணாதுரை;

உடையாளிபட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இ.மேகநாதன்;

சேலம் மாநகரம், செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வை. துரை;

திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.சன்னாசி;

மாநகர ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த க.குணசேகரன்;

மாநகர ஆயுதப்படையில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த த.மகேஷ்வரி;

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா.பாண்டி;

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமதாஸ்;

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நா. மும்மூர்த்தி;

தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செ. ராஜேஷ்கண்ணன்;

தூத்துக்குடி மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சு. ராஜேஸ்வரன்;

தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பா.வடிவேலு;

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா.முருகன்;

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த க. ஜெயகுமார்;

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ச.வெங்கடேசன்;

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வ. வெங்கடேசன்;

விருதுநகர் மாவட்டம், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ம.முருகன்;

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ. கண்ணன்;

விருதுநகர் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த த.பாஸ்கரன்;

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ந.தணிகைவேல்;

சென்னை பெருநகர காவல், மாதவரம் ழுசூகூ சாலைப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரா. தேசிங்கு; புனித தோமையர்மலை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த பிரதாப்;

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சே.ராஜேஷ்கண்ணா;

திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட தனிப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த த.சிவகணேஷ்

மதுரை மாநகர், கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். செக்கான் கருப்பன்;

தல்லாகுளம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அ.ஜோதிராம்;

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. வீரணன்;

சமயநல்லூர் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ம.நாகராஜன்;

ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த த.அசோக்குமார்;

சேலம் மாநகரம், இரும்பாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப.கனகராஜ்;

ஆயுதப்படையில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ப.வரதராஜன்;

திருச்சி மாநகரம், உறையூர் காவல் நிலையக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. பாலசுப்பிரமணியன்;

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த ர. குணசேகரன்;

தூத்துக்குடி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ந. தாமோதரன்;

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மாரிக்கண்ணு;

மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜக்கையா;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x