Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM
நாம் தமிழர் கட்சி, ரஜினி மன்ற நிர்வாகிகளை அதிக அளவில் திமுகவில் சேர்க்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தனிக் கட்சி தொடங்கி 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று கடந்த டிசம்பர் 29-ம் தேதிஅறிவித்தார். ரஜினி கட்சித் தொடங்கினால் அதிமுக, திமுகவுக்கு எதிரான வாக்குகளையும், ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும் பிரிப்பார் என்றும், திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.
ரஜினியின் முடிவால் அதிருப்தி அடைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். கடந்த ஜனவரி 17-ம் தேதி ரஜினியின் வலது கரம் என்று கூறப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்ததும் ஜோசப் ஸ்டாலினுக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமும் நற்பெயர் இருப்பதால் அவர்களை அதிக அளவில் திமுகவில் சேர்க்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிச் செயலாளர் வி.லட்சுமிவேலு, கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் எம்.அமீர்அப்பாஸ், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி வேல்முருகன், கன்னியாகுமரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ். வஹாப், கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் திமுகவில் இணைந்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பொறுப்பு, திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுபோல தீவிர தமிழ் ஆர்வலர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தீவிர ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு வர வேண்டிய வாக்குகள். எனவே, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை திமுகவில் சேர்க்குமாறு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக மாநில இளைஞரணிச் செயலாளர் ரா.ராஜீவ் காந்தி, மாநில மாணவரணிச் செயலாளர் சு.அமர்நாத், வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் மு.ரமேஷ் உள்ளிட்டோர் கடந்த 27-ம் தேதி திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில்இணைந்து வருகின்றனர். கட்சியில் இணைந்தவுடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜீவ்காந்தி, நாம்தமிழர் கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைப்பதில் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தீவிர தமிழ் ஆர்வலர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தீவிர ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு வர வேண்டிய வாக்குகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT