Last Updated : 12 Feb, 2021 03:16 AM

 

Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

மருமகனுடன் மல்லுக்கட்டும் மாமனார்

புதுச்சேரி காங்கிரஸில் இருந்து அண்மையில் தங்கள் பக்கம் வந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பலமாக நம்பி களமிறங்கிருக்கிறது பாஜக. அதே நேரம், தங்கள் கூட்டணியின் பிரதான கட்சியான என்.ஆர்.காங்கிரஸை விட்டுவிடவும் பாஜக தயாராக இல்லை.

என்ஆர்.காங்கிரஸ் நிறுவன தலைவர் ரங்கசாமியின் சொந்த அண்ணன் ஆதிகேசவன் மகளை திருமணம் செய்தவர்தான் நமச்சிவாயம். இதனால் ஒருவகையில் ரங்கசாமிக்கு நமச்சிவாயம் மருமகன் ஆவார். இதனால் மருமகனுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ‘சீனியர் லீடர்’ ரங்கசாமி.

முதல்வர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்னிறுத்த உள்ளதை பாஜக சூசகமாக குறிப்பிட்டு வருகிறது. என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் இம்முறை மிக குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்களே கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சமீபத்தில் நடந்த என்ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழாவில் பேசிய கட்சி நிறுவனர் ரங்கசாமி, "புதுவைக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கவில்லை; மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க மற்ற கட்சிகள் தயாரா?" என்று கேட்டிருக்கிறார். நமச்சிவாயத்தை முன்னிறுத்தும் பாஜகவுக்கு ரங்கசாமி வைக்கும் ‘செக்’ இது என்றே பேசப்படுகிறது.

இதற்கு மத்தியில், காங்கிரஸ் தரப்பும் ரங்கசாமியை அணுகி பேசி வருவதுதான் புதுவை அரசியலின் மற்றொரு திருப்பம்.

மொத்தத்தில் மாமனாரும், மருமகனும் முதல்வர் பதவியை குறி வைத்து செயல்பட தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x