Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
அதிகார மாற்றம் ஏற்படுத்த எந்த தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முசிறியில் ஏர்கலப்பை விவசாயிகள் சங்கம மாநாடு நேற்று நடைபெற்றது. வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வன் தலைமைவகித்தார். அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேசும்போது, ‘‘விவசாயிகளுக்கு எதிரானசட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக இருந்துவிட்டு,இப்போது விவசாயக் கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளுக்கு துணையாக இருப்பதுபோல அதிமுக அரசு நாடகமாடுகிறது. அதிமுக அரசு வீட்டுக்குப் போக போகிறது. தேர்தல் வரப்போகிறது என்பதால் பாஜகவும், அதிமுகவும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல முதலைக்கண்ணீர் வடிக்கின்றன’’ என்றார்.
மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் இல்லை என்றால் இந்தியா இந்நேரம் ஏழை மண்டலமாக இருந்திருக்கும். விபத்தின் காரணமாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அவர்களைத் தூக்கி எறியும் ஆற்றல் ராகுல்காந்திக்கு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை அனுமதித்தால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விரும்பும் இடத்தில் விற்க முடியாது. விவசாய சந்தைசுதந்திரமானதாக இருக்காது. ஒப்பந்த முறைக்கு மாறும்.
தமிழகத்தில் விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓராண்டு காலமாக வலியுறுத்தி வந்தோம். அப்போது இதை செய்யாமல், இப்போது திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக்கடனை தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்ததால், அதற்கு முன்பாக கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவிக்கிறார். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.
மாநிலத்திலும், மத்தியிலும் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தகாங்கிரஸ் துணையாக இருக்கும். அரசியல் நோக்கத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT