Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

என் மீதான வழக்கு பற்றி கவலையில்லை: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ரிஷிவந்தியத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 தினங்க ளாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று கள் ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

ஆளும்கட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மக்கள் ஆட்சி மாற் றத்திற்கு தயாராகி விட்டனர். திமுகஆதாரத்துடன் அளித்துள்ள ஊழல்புகாரால் ஆட்சியாளர்கள் கலக்கம்அடைந்துள்ளனர். சசிகலாவின் தயவால் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தது தொடர்பாக நான் பேசியதற்கு என்மீது வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்த வழக்குகளுக்காக கவலைப்படுபவன் அல்ல நான்.

மத்திய அரசின் கைப்பாவை யாக செயல்படும் அதிமுக ஆட் சியால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாமல் போனதால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவது, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கப்படும்.

தமிழகத்தில் ரூ.6,000 கோடி மதிப்பிலான சாலை போடும் ஒப்பந்தத்தை முதல்வர் பழனிசாமி தனது சம்பந்திக்கு வழங்கி யுள் ளார். முதல்வர் பழனிசாமி தமிழகத் திற்காக, தமிழக மக்களுக்காக எதுவும் செய்யாமல் ஊழல் ஆட்சி செய்து வருகிறார். இன்னும் 2 மாதங்களே உள்ளது. பொதுமக்கள் ஏமாந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x