Published : 01 Jun 2014 11:44 AM
Last Updated : 01 Jun 2014 11:44 AM

அரியலூர் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரியலூர் அருகே வெள்ளிக் கிழமை நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரியலூரில் இருந்து செந் துறைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஒட்டக்கோவில் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த அலமேலு, ஆனந்தி, கவிதா, ஜெயந்தி, சுரேஷ், செல்லமுத்து, தனவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சீதா, ஜெயலட்சுமி, சிறுமி பிரபாதர்ஷினி, இளவரசன், சாந்தி, அவரது குழந்தை அபினேஷ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தர விட்டுள்ளேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மின்சாரம் தாக்கி பலியானோருக்கு நிவாரணம்

தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் மின்சாரம் தாக்கி இறந்தவர் களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட் டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பூங்கா வனம், சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராகப் பணி புரிந்து வந்த சைதாப்பேட்டை குட்டி, திருப்பூர் நாட்டுராஜன் , வேலூர் பாபு, சென்னை தண்டையார்பேட்டை சிறுவன் வெங்கடேஷ், திருவள்ளூர் மணிகண்டன், காஞ்சிபுரம் ராஜி என்கிற சுப்பிரமணி, திருச்சி சிறுவன் சரண், புதுக்கோட்டை பால்ராஜ், கடலூர் ஓமந்தூரார் ஆகியோர் கடந்த சில மாதங்களில் மின்சாரம் தாக்கி உயரிழந்தனர்.

இவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x