Published : 13 Jun 2014 09:04 AM
Last Updated : 13 Jun 2014 09:04 AM
தமிழகத்தின் பல பகுதிகளில் ரூ.394 கோடியில் அமைக்கப் பட்டுள்ள 51 துணை மின் நிலை யங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத் தார். எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை நுகர்வோருக்கு அனுப்பும் சேவை யையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது:
மின்பாதையில் ஏற்படும் இழப்பையும், மின் பராமரிப்பு செல வினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப் படும் உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்க ளுக்கு சீரான மின்சாரம் வழங்க கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட் டம் தென்னூரில் ரூ.8 கோடியே 92 லட்சத்து 36 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் சென்னை மயிலாப்பூர், கோவை மாவட்டம் காரமடை, விருதுநகர் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களை சென்னை தலை மைச் செயலகத்தில் வியாழக் கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல் வர் ஜெயலலிதா வீடியோ கான் பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
மேலும் சென்னை கோடம் பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லிக்குப்பம், வேலூர், புதுத்தாங்கல், கோவை மாவட்டம் கதிர்நாயக்கன்பாளையம், குரு நல்லிபாளையம், பதுவம்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் கருங் கல், தூத்துக்குடி மாவட்டம் விஜயா புரி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மழையூர், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, திண்டுக் கல் மாவட்டம் ஏழுவனம்பட்டி, பாப் பம்பட்டி, கொசவபட்டி, மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உள் ளிட்ட 27 இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங் களையும் முதல்வர் திறந்து வைத் தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ராமா புரம், வெள்ளகுளம், திருப்பூர் மாவட்டம் வெ.மேட்டுப்பாளை யம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நக்கலமுத்தன் பட்டி, திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரம், தச்சநல்லூர், புதுக் கோட்டை மாவட்டம் அமர டக்கி, தஞ்சாவூர் மாவட்டம் குரு விக்கரம்பை, திருச்சி மாவட்டம் வரகனேரி, திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, கரூர் மாவட்டம் செல்லிவலசு உள் ளிட்ட 20 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் சார்பில் மொத்தம் ரூ.394.49 கோடியில் அமைக்கப்பட்ட 51 துணை மின் நிலையங்கள் திறக்கப் பட்டுள்ளன.
எஸ்எம்எஸ்-ல் கட்டண விவரம்
தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதுடன் மின் நுகர்வோருக்கு மின் கட்ட ணம் செலுத்துதல், மின் சாரம் தொடர்பான புகார்க ளைத் தெரிவித்தல் போன்றவற் றையும் எளிதாக்கும் நடவடிக்கை களையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இதன் தொடர் நிகழ்வாக மின் நுகர்வோருக்கு அவர் களது மின் பயனீட்டளவு கணக் கிடப்பட்டவுடன் கட்டணத் தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி நாள் மற்றும் கட்ட ணம் செலுத்த வேண்டிய கடைசி மூன்று தினங்களுக்கு முன்பு நினைவூட்டல் ஆகிய தகவல்களை குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பும் சேவையையும் முதல்வர் ஜெயலலிதா வியாழக் கிழமை தொடங்கி வைத்தார். இந்த சேவையின் மூலம் தமிழகத் திலுள்ள 2 கோடி மின் நுகர்வோர் பயனடைவர்.
இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவ நாதன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பால கிருஷ்ணன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலை வர் மற்றும் மேலாண்மை இயக்கு நர் கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட னர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT