Last Updated : 03 Feb, 2021 02:27 PM

 

Published : 03 Feb 2021 02:27 PM
Last Updated : 03 Feb 2021 02:27 PM

தனது பெயரில் சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு கூடுதல் வழக்கறிஞர் புகார்

சர்ச்சைப் போஸ்டர் (இடது); சிவகங்கை மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்ணன் (வலது)

சிவகங்கை

சசிகலாவுக்கு ஆதரவாக தனது பெயரில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கண்ணன் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து, சசிகலா கடந்த ஜன.27-ம் தேதி விடுதலையானார். மேலும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிலதினங்களுக்கு முன்பு குணமடைந்து பெங்களூருவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் சிவகங்கையில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் சி.கண்ணன் என்பவரது பெயரில்
போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதற்கிடையில் தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர் கண்ணன் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சர்ச்சை தொடர்பாக கண்ணன், "அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, எனக்கு எதிராக செயல்படும் வகையில் சமூக விரோதிகள் சிலர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவர்கள் மீது போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon