Published : 31 Jan 2021 12:06 PM
Last Updated : 31 Jan 2021 12:06 PM
நாடாளுமன்றத்தில் நாளை (திங் கட்கிழமை) தாக்கல் செய்யப் படவுள்ள ரயில்வே பட்ஜெட் டில் தனுஷ்கோடி ரயில்பாதைக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதி கரித்துள்ளது.
தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து மன்னார் மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
சென்னைக்கும் தனுஷ்கோடிக்கும் ரயில் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிசம்பர் 17-ல் ஏற்பட்ட பெரும் புயலால் தனுஷ்கோடி ரயில் நிலையத்திலும், துறைமுகத்திலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
ரூ. 208 கோடியில் திட்டம்
புயல் தாக்கி 55 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய ரயில்வே அமைச்சகம், ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கி.மீ. தொலைவுக்கு
ரூ. 208 கோடியில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்து சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனுஷ்கோடி ரயில் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
ஆனால், இந்த திட்டத்துக்கு ரூ. 7 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு செல விடப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக பணிகளில் எந்த முன் னேற்றமும் இல்லை. எனவே, மேற்கண்ட தனுஷ்கோடி ரயில்வே திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த பட்ஜெட்டில் நிதிஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் தனுஷ்கோடி கடலில் புனித நீராட முடியும். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் கணிசமாக அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT