Published : 31 Jan 2021 11:28 AM
Last Updated : 31 Jan 2021 11:28 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு ஆண்டுதோறும் 30 டன் வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், சாணார் பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் நான்காயிரம் ஏக்கர் பரப்பில் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டத் தில் 30 டன்னுக்கும் அதிகமாக பட்டுக்கூடுகள் உற்பத்தியாகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் சிவ கங்கை, ராமநாதபுரம், பட்டுக்கூடு அங்காடிகளில் விற்பனை செய்யப்படு கின்றன. சிவகங்கைக்கு அடுத்து வெண்பட்டு அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. பட்டுத்தொழில் மேற்கொள்ள குறைந்த பட்சம் ஒரு ஏக்கர், அதிக பட்சமாக ஐந்து ஏக்கர் வரை மல்பெரி நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் மானியத்தொகை வழங்கப்படுகிறது.
ஆயிரம் சதுர அடிக்கு மேல் புழு வளர்ப்பு மனை கட்டி புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 87,500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. சிறந்த பட்டு விவசாயிகளை தேர்வு செய்து முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மேகலா கூறுகையில், பழனி வட்டத்தில் 1323.50 ஏக்கர் பரப்பில் 475 விவசாயிகளும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 736.50 ஏக்கர் பரப்பில் 308 விவசாயிகளும், சாணார்பட்டி வட்டத்தில் 843.00 ஏக்கர் பரப்பில் 447 விவசாயிகளும், வேடசந்தூர் வட்டத்தில் 462.25 ஏக்கர் பரப்பில் 236 விவசாயிகளும், வத்தலகுண்டு வட்டத்தில் 592.10 ஏக்கர் பரப்பில் 310 விவசாயிகளும் என மொத்தம் 3957.35 ஏக்கர் பரப்பில் 1776 விவசாயிகள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய விவசாயிகளுக்கு பட்டுத் தொழில் சம்பந்தமான பயிற்சி அளித்தல், பட்டுப்புழு வளர்ப்பில் அறுவடைக்கு ஆதாரமான நோய்த்தடுப்பு பயிற்சிகள் மற்றும் புழு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை வழங்குதல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய வழிகாட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் பட்டு வளர்ச்சித்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பட்டுக்கூடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு நல்ல வருவாய் ஈட்ட முன்வர வேண்டும், என்றார்.நத்தம் அருகே செந்துரையில் பட்டுப்புழு உணவுக்காக வளர்க்கப்படும் மல்பெரி செடிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT