Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற் றது. இதில், அக்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற் றுப் பேசினார். முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறும்போது, ‘‘ பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு தற்போது ஆளுநர் கையெழுத்திடவுள்ளார். எப்படியும் போராடி விடுதலையை சாத்தியப்படுத்துவோம். தேர்தல் லாபத்துக்காக என்றாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன். இட ஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார். மக்களுக்கு பிரச்சினையே அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள்தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களில் தீர்க்கப் போகிறார்கள்.
பாஜக ஆட்சியின் சாதனைகளை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள், கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடுந்திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் ஐயப்பன், தமிழகத்தில் முருகன், பாஜகவும், ஸ்டாலினும் வேல் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கத்தான்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT