Published : 30 Jan 2021 04:35 PM
Last Updated : 30 Jan 2021 04:35 PM
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுக் கடலில் கரைக்கப்பட்டது. அதன் நினைவாக கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் நினைவு நாளையொட்டி இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனார்.
இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். மேலும், காந்தியடிகள் நினைவு நாளையொட்டி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூல் வேள்வி நிகழ்ச்சி நடந்தது.
காந்தி நினைவு மண்டபத்திற்கு கரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் காந்தி மண்டபத்திற்குச் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. இதனால் காந்தி நினைவு நாளில் மண்டபத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT