Published : 11 Jun 2014 09:51 AM
Last Updated : 11 Jun 2014 09:51 AM
உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் திறந்தவெளி கழிப்பிடத்துக் குச் சென்ற இரண்டு சகோதரிகள் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப் பட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவ தும் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் தலைந கரான சென்னையிலும் பாதுகாப்பற்ற திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன் படுத்தும் நிலையில்தான் பெண்கள் உள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, சென்னை நகரத்தில் 11 லட்சத்து 6 ஆயிரத்து 567 குடும்பங் கள் வசிக்கின்றன. இவர்களில் 4.4 சதவீதம் பேர் மட்டுமே பொதுக் கழிப் பிடங்களை பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு குடிசைமாற்று வாரி யம் 2005-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் 3. 2 லட்சம் மக்கள் குடிசை பகுதிகளில் வசிக்கின்றனர் என்றும், இவர் களில் 29 சதவீதம் பேர் மட்டுமே தனிக் கழிப்பறைகளை பயன்படுத்து கின்றனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள மக்கள் பொதுக் கழிப்பிடங்களையே நம்பி உள்ளனர். நகரத்தில் மொத்தம் 905 பொதுக் கழிப்பிடங்களே உள்ளன. இவற்றின் நிலையும் மோசமாகவே உள்ளது. பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி இல்லை. மக்கள் வீடுகளில் இருந்து தான் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். பல கழிப்பிடங்களில் கதவுகள் உடைந்த நிலையிலும், துருப்பிடித்தும் இருக்கின்றன. மின் விளக்கு, குழாய்கள் இருப்பதில்லை.
சில இடங்களில் ஆண்களும் பெண்களும் ஒரே கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. அதுபோன்ற இடங்களில் பெண்கள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். வக்கிர புத்தி கொண்ட சில ஆண்கள், பெண்களின் கழிப்பறைகளை எட்டிப் பார்ப்பதாக புகார்கள் வருகின்றன.
பெரும்பாலான இடங்களில் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங் களை நோக்கிச் செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. சென்னையில் திறந்த வெளி கழிப்பிடங்களாக ரயில் பாதை, கூவம் ஆற்றங்கரை, நடைபாதை, பாலங்கள் ஆகியவை உள்ளன. இரவு நேரத்தில் இப்பகுதிகளுக்கு தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. நகை பறிப்பு போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.
சிந்தாதிரிப்பேட்டை குடிசைப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும் போது, ‘‘இந்தப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால் வைக்கவே முடியாத அளவுக்கு கழிப் பறை மோசமாக இருக்கிறது. அதனால் திறந்தவெளியைத்தான் பயன் படுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடனும் சங்கடத்துடனும்தான் செல்ல வேண்டியிருக்கிறது’’ என்றனர். குடிசை பகுதிகளில் வசிக்கும் இளம்பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் நிலையோ இன்னும் மோசம். பெரும்பாலான பள்ளி மாணவி கள் சுகாதாரமற்ற கழிப்பறைக ளையே அதிகாலையில் பயன்படுத்து கின்றனர். இல்லாவிட்டால் பள்ளிக்கு சென்ற பின்புதான் இயற்கை உபாதையை கழிக்க வேண்டி இருக்கிறது.
உத்தரப்பிரதேச நிலை சென்னை பெண்களுக்கு ஏற்படாமல் இருக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பொதுக் கழிப்பிடங்களை அதிக அளவில் கட்டித் தரவேண்டும். அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT