Published : 16 Nov 2015 09:52 AM
Last Updated : 16 Nov 2015 09:52 AM
இந்தியாவில் முறையற்ற நீர்ப் பாசனம், வேதி உரங்களின் பயன்பாட்டால் விவசாய நிலங்கள் பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 329 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் 175 மில்லி யன் ஹெக்டேர் நிலங்கள் விவசா யம் செய்ய முடியாமல் பாழடைந் துள்ளன. 67.27 மில்லியன் ஹெக் டேர் நிலங்களில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதால், இந் நிலங்களில் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உப்பு பாதிப் படைந்த விவசாய நிலங்கள் பாதிப் பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
முதல் 5 இடங்களில் குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழகத்தில் 3.54 லட்சம் ஹெக் டேர் விவசாய நிலங்கள் உப்பினால் பாதிக்கப்பட்ட உள்பகுதி நிலங்கள். 0.13 லட்சம் ஹெக்டேர் கடலோர விவசாய நிலங்கள். மொத்தம் 3.67 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உப்பு படிந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி வேளாண்மை பொறியாளர் பிரிட்டோராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நிலங்களில் உப்பு படிவதற்கு ஐந்து காரணங்கள் உள்ளன. முறையற்ற கூடுதல் நீர் பாசனம், நீர் வெளியேற முடியாத சதுப்பு நிலங்கள், ஆற்றுப்படுகை நிலங் கள், அதிக அளவு வேதி உரங்கள் (குளோரைடு, சல்பேட் உள்ளடக் கியவை) பயன்படுத்துவதால், தண்ணீர் வடிகால் வசதி இல்லாத நிலங்கள் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்களில் உப்பு படிகின்றன. தமிழகத்தில் கடலூர், நீலகிரி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, விருது நகர் மற்றும் ராமநாதபுரம் மாவட் டங்களில் அதிகளவிலும், காஞ்சி புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓர ளவும் விவசாய நிலங்களில் உப்பு படிந்து வருகின்றன. இந்த நிலங் களில் உப்பு படிதல் காரணமாக சாகுபடி செய்த பயிர், மரங்களு டைய வேர் வளர்ச்சி பாதிப்பு, குறைவான இலைகள் வளர்தல், இலைகளில் அதிகப்படியான மஞ்சள் படிவது, இலைகள் எளிதில் உதிர்ந்து கீழே விழுவது, மெதுவான வளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வேர் அழுகும் பயிர்கள்
இந்த நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் உப்பு நிரந்தரமாக இந்த நிலத்தில் மேல் அடுக்காக படிந்துவிடுகிறது. இதனால், மண்ணின் காற்றோட்டம், நுண்ணுயிர் பெருக்கம், நீர் உள்ளே செல்லும் அளவும் குறைந்து நிலத்தில் சாகுபடி செய்யும் பயிர்களின் வேர் அழுகுகிறது. இந்த நிலங்களை சீர் செய்ய, இந்த வடகிழக்குப் பருவ மழை மிகவும் உகந்த காலம்.
பொதுவாக நெல், வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் மீண்டும், மீண்டும் பயிரிடும் களிமண் நிலங்களில் அதிகமான நீரையும், வேதி உரங்களையும் பயன்படுத்துவதால் இந்நிலங்களில் உப்பு பாதிப்பு அதிகமாகிறது.
இந்த நிலங்களில் உப்பு படிந்த மேல் மண்ணை வழித்தெடுத்து அப்புறப்படுத்துதல், விதைப்பதற்கு உரிய காலத்துக்கு சற்றுமுன் விதைத்து, நல்ல நீர் கொண்டு விவசாயம் செய்தல், வரப்பு அமைத்து (பார் அமைத்தல்) செடிகளை மாற்றும்போது, வரப்பின் சாய்வின் நடுவில் செடிகளை நடவு செய்வதால் உப்பு பாதிப்பில் இருந்து இந்த விவசாய நிலங்களை காக்கலாம் என்றார்.
உப்பை எவ்வாறு வெளியேற்றலாம்?
உப்பு படிந்த நிலங்களில் 2 அடி வரை ஆழத்தில் உப்பு தங்கி இருக்கும். உப்பு படிவங்களை உடைக்க உளி கலப்பையைக் கொண்டு ஆழமாக உழுது, நிலம் காற்றோட்டம் புகும் வகையிலும், நுண்ணுயிர்கள் உள்ளே செல்வதற்கு ஏதுவாகவும் நிலத்தை மாற்றலாம். மேலும், இந்த நிலங்களில் விதைப்பதற்கு 6 வாரங்களுக்கு முன், ஒரு ஹெக்டேருக்கு 1.2 முதல் 2 டன் அளவில் ஜிப்சத்தை தினமும் கொட்டி நிலத்தை முறையாக உழுது பயன்படுத்தலாம். மழைநீர் உப்பு கலப்படம் இல்லாத நல்ல நீர். அதனால், உப்பு பாதித்த நிலங்களில் பாத்திகள் அமைத்து, விழும் மழை நீரை அந்த நிலத்திலேயே சேமித்து மழைநீர் நிலத்தில் உட்புகும் வகையில் அமைக்கலாம். மழைநீர் உட்புகாமல் தேங்கி இருந்தால், அந்த நிலங்களின் சாய்வின் மூலையில் உள்ள வரப்பை உடைப்பதால் தேங்கியுள்ள மழைநீர் விரைவாக வெளியேறி, மேல்புறம் உள்ள உப்பை கரைத்து அதன் தாழ்வான பகுதியில் அமைந்திருக்கும் ஓடைகளின் வழியே வெளியேறி, நிலங்களில் உப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவும். இம்முறை நீரினால் அலசுதல் என்றழைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT