Published : 31 Mar 2014 10:18 AM
Last Updated : 31 Mar 2014 10:18 AM

தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை கோரி உண்ணாவிரதம்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பு மற்றும் சிவனடியார் பெருமக்களின் தலைவர் சண்முகா ஆனந்தம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் சிவன் கோயில்கள் உள்ளன. இவற்றில் 38,000 கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயில்களில் வடமொழிகளில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. இது மாற வேண்டும். தேவாரம், திருவாசகம் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வியில் தேவாரம், திருவாசகத்தை பாடமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு நல்ல நெறிமுறைகளை கற்பிக்கும். அரசு சார்பில் சிவன் ஆலயங்களில் நாயன்மார்கள் குரு பூஜை நடத்த வேண்டும்.

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் ஆகிய இடங்களுக்குச் சென்று வர அரசு மானியம் வழங்கும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x