Published : 24 Jan 2021 05:57 PM
Last Updated : 24 Jan 2021 05:57 PM

காங்கேயம், வெள்ளக்க்கோயில் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர், திறந்துவிட வேண்டும்: ஜி.கே வாசன் வலியறுத்தல்

சென்னை

காங்கேயம், வெள்ளக்க்கோயில் பகுதி விவசாயத்திற்கு, பி.ஏ.பி. பாசன திட்ட ஒப்பந்தப்படி தண்ணீர், திறந்துவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரம்பிக்குளம் ஆழியாறு, பாசன விவசாயிகள், பாசன நீர் பங்கீட்டின் படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கயத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனார்.

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் காங்கேயம், வௌ;ளக்கோவில் கடைமடைப் பகுதிகளில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் நிலம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஏ.பி. பாசன நீர் பங்கீட்டு சட்டப்படி 14 நாட்கள், அதாவது மடை விட்டு மடை 7 நாட்கள் தண்ணீh; திறந்துவிட வேண்டும். ஆனால் பாசன தண்ணீர் மாதத்திற்கு 7 நாட்களுக்குப் பதிலாக 3 நாட்கள் தான் திறந்து விடுகிறார்கள். இவை கடைமடைப் பகுதிகளுக்கு 2 நாட்கள் தான் வருகிறது. இவற்றில் தண்ணீh; வரும்போழுது கால்வாய் பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீh; முறைகேடாக பயன்படுத்தப்படுவதால், திறந்துவிடப்படும் தண்ணீh; முழுமையாக கடைமடைப் பகுதிகளுக்கு சென்று சோர்வதில்லை.

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இருக்கின்றன. பி.ஏ.பி பாசன திட்டத்தின் உத்தரவாதத்தின் படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீh; திறந்து விட்டால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்துவிடும். விவசாயம் செழிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீh; வரும்போது முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்கப்பட வேண்டும். மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன விவசாயிகளின் கோhpக்கைகளை நிறைவேற்றி அவா;களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x