Last Updated : 21 Jan, 2021 07:16 PM

1  

Published : 21 Jan 2021 07:16 PM
Last Updated : 21 Jan 2021 07:16 PM

வீட்டில் நிறுத்தியிருந்த வாகனத்துக்கு திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் கட்டணம் பிடித்தம்: உரிமையாளர் புகார்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்திற்கு கட்டணம் பிடித்ததற்கு கார் உரிமையாளர் புகார் தெரிவித்தார்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் கமர் ரகுமான். இவரது தனது காரை ஒரு வாரமாக எடுக்காமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மதுரை -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடியில் இருந்து பாஸ்டேக் மூலம் கட்டணம் எடுத்ததாக அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கமர் ரகுமான் இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், கட்டணம் பிடித்ததற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த கமர் ரகுமான் அவர்களிடம் பிரச்சினை செய்தார். இருந்தபோதிலும் ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து கமர்ரகுமான் கூறியதாவது: ”டோல்கேட்டில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருப்பதைத் தடுக்கவே பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. வீட்டில் நின்ற காருக்கு ரூ.35 கட்டணம் வசூலித்துள்ளனர்.

இதுகுறித்து ஊழியர்களிடம் நான் புகார் செய்தபோது, டோல்கேட் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால், அதில் என்னுடைய வாகனம் சென்றதற்கான ஆதாரமும் இல்லை. இதனால் பணத்தைத் திருப்பிக் கேட்டால் எங்களுக்குத் தெரியாது என்று பொறுப்பின்றி ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே பலமுறை இதேபோல் டோல்கேட்டை கடக்காமலேயே கட்டணம் எடுத்துள்ளனர். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். இதேபோல் பலரிடம் பணம் பிடித்தம் செய்தால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

இந்த முறைகேடு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

இதுகுறித்து டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘எங்களுக்கும் பணம் எடுத்ததற்கும் சம்பந்தம் இல்லை. வங்கியில் தான் கேட்க வேண்டும்’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x