Published : 10 Mar 2014 03:08 PM
Last Updated : 10 Mar 2014 03:08 PM
தாம்பரம் தொகுதி திமுக முன் னாள் எம்.எல்.ஏ. பம்மல் நல்ல தம்பி, நீரிழிவு நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையறிந்த திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள நல்லதம்பி வீட்டுக்குச் சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் வெளியே வந்த அழகிரி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் சூழ்நிலை நிலவுகிறதே?
நான் இப்போது திமுகவில் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வீர்களா?
இல்லை.
பம்மல் நல்லதம்பியை திடீரென சந்திக்க காரணம் என்ன?
என்னுடைய சிறு வயதில் இருந்தே அவரைப் பற்றி தெரியும். அவர் உடல் நிலை பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்த தால், நேரில் பார்த்து உடல்நலம் விசாரிக்க வந்தேன்.
புதிய கட்சி தொடங்குவீர்களா?
இல்லை.
நீங்கள் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று உங்கள் ஆதர வாளர்கள் எதிர்பார்க்கிறார்களே?
ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து, 2 மாதங்களுக்குப் பிறகு முடிவு எடுப்பேன். இவ்வாறு அழகிரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT