Published : 10 Oct 2015 09:58 AM
Last Updated : 10 Oct 2015 09:58 AM
வழக்கறிஞர்களுக்கு எதிரான அச்சுறுத்தலைக் கண்டித்து தமிழ்நாடு கீழமை நீதிமன்ற வழக் கறிஞர்கள் வரும் 11-ம் தேதி தஞ்சாவூரில் நடத்த திட்டமிட்டிருந்த கூட்டத்துக்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங் களை நடத்தினர்.
இதையடுத்து மதுரை வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறி ஞர்கள் நடந்து கொண்ட விதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். இந்த நிலையில், தர்மராஜ், ஏ.கே.ராமசாமி உட்பட மதுரை வழக்கறிஞர்கள் 14 பேரை சஸ்பெண்ட் செய்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மணன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.
இதைக் கண்டித்து, திருச்சியில் வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்தினர். அதுபோன்ற கூட்டத்தை எப்படி அனுமதித்தீர்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கேள்வி எழுப்பியது. அந்த கூட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்கும்படியும் (வீடியோ ஆதாரம் உள்பட) உத்தரவிட்டுள் ளது.
இந்நிலையில், அதுபோன்ற மற்றொரு கூட்டத்தை 11-ம் தேதி (நாளை) தஞ்சாவூரில் தமிழ்நாடு கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய பார் கவுன்சில், தஞ்சாவூரில் நடைபெறவிருந்த கூட்டத்துக்கு தடை விதித்து நேற்றிரவு உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் கூறும்போது, “வழக்கறிஞர்களின் கூட்டத்துக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மணன்குமார் மிஸ்ரா தடை விதித்துள்ளார். தடையை மீறி வழக்கறிஞர்கள் கூட்டம் நடத்தினால், அதன் அமைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் எனக்கு ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தடையை மீறி கூட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT