Published : 20 Jan 2021 03:52 PM
Last Updated : 20 Jan 2021 03:52 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜன 20) தெரிவித்திருப்பதாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் இன்று 3,679 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 24, காரைக்கால் - 2, மாஹே – 5 என மொத்தம் 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், இன்றைய தினம் உயிரிழப்பு எதுவுமில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 737 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 127 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 169 என மொத்தம் 296 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 798 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 42 ஆயிரத்து 508 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 330 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT