Last Updated : 20 Jan, 2021 01:41 PM

 

Published : 20 Jan 2021 01:41 PM
Last Updated : 20 Jan 2021 01:41 PM

இறுதி வாக்காளர் பட்டியல்: புதுக்கோட்டையில் 13,48,964 வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கட்சியினரின் முன்னிலையில் 2021-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பேசியதாவது:

''புதிய வாக்காளர் பட்டியலில் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் 1,00,810 ஆண்கள், 1,00,241 பெண்கள், 20 இதரர் என மொத்தம் 2,01,071 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோன்று, விராலிமலை தொகுதியில் 1,10,810 ஆண்கள், 1,13,723 பெண்கள், 17 இதரர் என மொத்தம் 2,24,550 வாக்காளர்களும், புதுக்கோட்டை தொகுதியில் 1,18,944 ஆண்கள், 1,24,263 பெண்கள், 22 இதரர் என மொத்தம் 2,43,229 வாக்காளர்களும், திருமயம் தொகுதியில் 1,10,974 ஆண்கள், 1,16,167 பெண்கள், 3 இதரர் என மொத்தம் 2,27,144 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும், ஆலங்குடி தொகுதியில் 1,06,955 ஆண்கள், 1,09,971 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 2,16,930 வாக்காளர்களும், அறந்தாங்கி தொகுதியில் 1,16,883 ஆண்கள், 1,19,151 பெண்கள், 6 இதரர் என மொத்தம் 2,36,040 வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 6,65,376 ஆண்கள், 6,83,516 பெண்கள், 72 இதரர் என 13,48,964 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் 1 மாதம் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் மூலம் சேர்ந்த 53,124 வாக்காளர்களில் 33,200 பேர் 19-வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

மேலும், கந்தர்வக்கோட்டை தொகுதியில் 239 வாக்குச்சாவடிகளும், விராலிமலையில் 255, புதுக்கோட்டையில் 263, திருமயத்தில் 267, ஆலங்குடியில் 242 மற்றும் அறந்தாங்கியில் 281 என மொத்தம் 1,547 வாக்குச்சாவடிகள் உள்ளன''.

இவ்வாறு உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x