Published : 22 Oct 2015 08:56 AM
Last Updated : 22 Oct 2015 08:56 AM
காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 13 ஓட்டுநர்களை டிஸ்மிஸ் செய்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்கள் உள்ளது. இதில், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கிளை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், தேவ கோட்டை பழுதுபார்க்கும் மையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை ஆகிய 12 கிளைகள் உள்ளன.
இக்கிளைகளில், 1991, 1992, 1994-ம் ஆண்டில் தலா ஒருவர், 1993-ல் 5 பேர், 1997-2 பேர் , 1998-3 பேர், 2001, 2002-ல் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் ஓட்டுநர் பணிக்கு புதிதாக நியமனம் ஆகி யுள்ளனர். இவர்களின் சான்றிதழை சரிபார்த்தபோது அவர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் போலி கல்விச் சான்று கொடுத்து பணிக்கு சேர்ந்த 15 ஓட்டுநர்களை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர். இதில், டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பே இருவர் இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 13 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
இதுகுறித்து அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஓட்டுநர்களின் கல்விச்சான்று களை ஆய்வு செய்ததில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே தேர்ச்சி பெற்றதாக போலிச் சான்று கொடுத் திருப்பது தெரியவந்தது. தற்போது 13 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தர விட்டுள்ளோம். இதில், மூன்று பேர் நீதிமன்றத்தை அணுகியதாக தெரியவருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT