Last Updated : 19 Jan, 2021 02:04 PM

2  

Published : 19 Jan 2021 02:04 PM
Last Updated : 19 Jan 2021 02:04 PM

பொதுமக்கள் குறைகளைத் தெரிவக்க வாட்ஸ் அப் எண்: தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை 7305089504 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் செயல்படுத்துவதற்கு ஏதுவாக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மனுதாரர்களின் வீண் செலவு மற்றும் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.

மேலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு நேரடியாக தெரிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் தனிநபர் மற்றும் பொதுவான கோரிக்கைகளை மனுவாகவோ, புகைப்படமாகவோ, குரல் வழி செய்தியாகவோ இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்யர் சமீரன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (20-ம் தேதி) காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகள் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், கடையம், கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் வட்டார விவசாயிகள் கீழப்பாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் மற்றும் மேலநீலிதநல்லூர் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், குருவிகுளம் வட்டார விவசாயிகள் குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் தங்கள் மனுக்களுடன் காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x