Last Updated : 01 Oct, 2015 10:02 AM

 

Published : 01 Oct 2015 10:02 AM
Last Updated : 01 Oct 2015 10:02 AM

நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயம்: தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி

நெல்லுக்கான ஆதார விலையை நிர்ணயம் செய்து மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.1,360, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,400 என கடந்த ஆண்டு மத்திய அரசு ஆதார விலை நிர்ணயம் செய்திருந்தது. கடந்த ஜூன் மாதம் இந்த விலையில் ரூ.50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன் சேர்த்து சாதாரண ரக நெல்லுக்கு ரூ.50 மற் றும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.70 கூடுதலாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதன்படி சாதாரண ரக நெல்லுக்கு குவிண் டால் ஒன்றுக்கு ரூ.1,460 மற்றும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,520 என தமிழக விவசாயிகளுக்கு விற்பனை விலை கிடைக்கும்.

ஆனால் இந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்கு திருப்தி தர வில்லை. விதை நெல் செலவு, நாற்று விடுதல், நாற்று பறிப்பு, உழவு, நடவு நடுதல், உரம், பூச்சிக்கொல்லி, களை எடுத்தல், அறுவடை என நெல் சாகுபடிக்கு பெரும் செலவா கிறது. இயல்பான மழை பொழிந்து, தேவையான தண்ணீர் கிடைக்கும் ஆண்டு களில் ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. வறட்சி அல்லது கடும் மழையால் வெள்ளம் ஏற்படும் ஆண்டுகளில் இந்த செலவு மேலும் அதிகரிக்கும்.

மேலும், நிலத்தின் உரிமை யாளரான விவசாயியோ அல்லது விவசாயத் தொழிலாளி ஒருவரோ அன்றாட பராமரிப்பு பணிகளுக்காக தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது வயலில் இருந்தாக வேண்டும். இந்த மனித உழைப்புக் கான கூலியையும் சேர்க்கும்போது செலவுத் தொகை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டிவிடும்.இந்நிலையில் நன்றாக விளைச்சல் இருக்கும் ஆண்டுகளில் கூட ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 20 குவிண்டால் நெல் மகசூல் கிடைப்பதே பெரிது என்கின்றனர் விவசாயிகள். தற்போ தைய விலை நிலவரப்படி இந்த மகசூலுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் மட் டுமே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

ஆக, நன்றாக விளைச்சல் இருக்கும் ஆண்டுகளில் கூட நெல்லுக் கான உற்பத்தி விலை மட்டுமே, விற்பனை விலையாக கிடைக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த மறுநாள் நெல் விலை நிர்ண யம் குறித்த அறிவிப்பை அரசு வெளி யிட்டுள்ளது. இது சரியல்ல. நெல் லுக்கு குறைந்தபட்சம் குவிண் டாலுக்கு ரூ.2 ஆயிரமாவது விலை தர வேண்டும். இல்லையெனில் உணவுப் பாதுகாப்பு என்பதே கேள்விக்குரியதாகி விடும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:

சந்தையில் நுகர்வோருக்கு விற்கப்படும் அரிசியின் விலை மிகக் கடுமையாக இருக்கும் நிலையில், அதனை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு உற்பத்தி செலவுக்கான தொகைகூட கிடைக் காத நிலை தொடர்கிறது. குவிண் டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிர மாவது விலை வழங்கினால்தான் விவசாயிகளுக்கு ஓரளவாவது நியாயமான விலை கிடைக்கும்.

இவ்வாறு ரங்கநாதன் தெரிவித்தார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். இது தொடர்பான தமது தேர்தல் வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x