Published : 16 Jan 2021 09:38 PM
Last Updated : 16 Jan 2021 09:38 PM
மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தனக்கு கடிதம் அனுப்பிருப்பதாக மாணிக்க தாகூர் எம்.பி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மல்லிகையை உலக அளவில் கொண்டு செல்வதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மக்களவைவில் குரல் எழுப்பி இருந்தேன். அதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் அனுப்பிய கடிதம் தற்போது வந்திருக்கிறது.
அந்தக் கடிதத்தில் பியூஸ் கோயல், திருப்பரங்குன்றம் திருமங்கலம் பகுதியில் (எக்ஸ்போர்ட் ஜாஸ்மின் ) மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதற்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும். மல்லிகை உற்பத்தியாகும் மாவட்டங்களில் ஏற்றுமதி மையங்கள் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதாகவும் அதில் மதுரை மல்லிகையை மத்திய அரசு வெளி மார்க்கெட்டிலும் ஏற்றுமதி செய்வதற்காகவும் மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசு திட்டம் வகுக்கும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்கள் தென் மாவட்டங்களுக்கு வருவதற்கு மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி யைம் உருவாகுவதற்கு இரு அரசுகளும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தது தமிழர்களின் பெருமையும் பண்பாட்டையும் மற்ற மாநில மக்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்புள்ளது. இது தெரியாமல் பாஜகவினர் ராகுலுக்கு கறுப்புக் கொடி காட்டுவது போன்றவை அவர்களின் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
இ்வ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT