Published : 12 Oct 2015 10:27 AM
Last Updated : 12 Oct 2015 10:27 AM
தரமற்ற கேமராக்கள், குறைந்த எண்ணிக்கையிலான போலீஸாரால் தமிழக அரசு மருத்துவமனைகளில் தினமும் 12 ஆயிரம் குழந்தைகளை பாதுகாப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் 21 மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், 240 தாலுகா மருத்து வமனைகள் உள்ளன. அரசு மருத் துவமனைகளில் மட்டும் கடந்த சில நாட்களில் 43 குழந்தைகள் திருடு போயுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 8 குழந்தைகள் திருடு போயுள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் தினமும் சுமார் 700 பிரசவங்களும், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் தினமும் சுமார் 5 ஆயிரம் பிரசவங்களும் நடக்கின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலுமாக கடந்த ஆண்டு 4,47,125 பிரசவங்கள் நடந்துள்ளன.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குறைந்தது 8 நாள் குழந்தையுடன் தங்க வைக்கப்படுகின்றனர். இவ்வாறு தினமும் 12 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் தங்க வைக்கப்படுகின்றனர்.
உள்நோயாளிகளாக இருக்கும் தாய்க்கும், குழந்தைக்குமான பாது காப்புக்கு குறைந்த எண்ணிக் கையிலேயே போலீஸார் உள்ளனர். இதன் விளைவாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பொம்மன் பட்டியைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தை, சில மணி நேரத்தில் திருடப்பட்டது. அந்த குழந்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இதுதொடர்பாக மீனாட்சி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1012-க் கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. காவலர்கள் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகும் அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகள் திருடு போவது நீடிக்கிறது. நாகப்பட்டினம், மதுரை, நெல்லை, சென்னை அரசு மருத்துவமனைகளிலும் குழந்தை திருட்டுச் சம்பவம் அரங்கேறியது.
இதுகுறித்து அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய சம உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கூறியதாவது:
மதுரை, சென்னை அரசு மருத் துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் வரை வந்து செல் கின்றனர். இங்கு கேமராக்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பொருத்தமான இடங்களி லும் பொருத்தவில்லை. அந்த கேமராக்கள் தரமானதாகவும் இல்லை. காட்சிகள் தெளிவில் லாமல் இருப்பதால் குழந்தைகளை திருடிச் செல்வோரை கண்டுபிடிப் பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த கேமராக்களின் தரத்தை எல்காட் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆபரேஷன் ஸ்மைல்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிகளில் மாயமான 439 குழந்தைகளை கண்டுபிடிக்கவும், குழந்தை திருட்டு கும்பலை கண்டுபிடிக்கவும் கடந்த ஆண்டு ஆபரேஷன் ஸ்மைல் என்ற பெயரில் போலீஸார் தனிப்படை அமைத்து மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி, இதுவரை 100 குழந்தைகளை கண்டுபிடித்துள்ளனர். திருச்செந்தூரில் குழந்தை திருட்டு கும்பலை சேர்ந்த சிலரையும் கைது செய்தனர். தற்போது ஆபரேஷன் ஸ்மைல் தனிப்படை என்ன செய்கிறது எனத் தெரியவில்லை. ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் அம லில் இருந்து வருகிறது. அரசின் அனுமதி பெற்று தேவைப்படும் போது தனிப்படையினர், மாய மான குழந்தைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT