Published : 30 Jun 2014 09:42 AM
Last Updated : 30 Jun 2014 09:42 AM
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தம்பியின் உடலை பார்த்து, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் எஸ்ஐ கதறி அழுதார்.
இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டிடத்தில், சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் குணவதியின் தம்பி லோகநாதன் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் அம்பத்தூர் கல்லிக்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இடிந்து விழுந்த கட்டிடத்தில் உதவி ஆய்வாளர் குணவதி ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, அவரது தம்பி இடிபாடுகளில் சிக்கி தலை நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அதைப் பார்த்த குணவதி கதறி அழுதார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து லோகநாதன் உடலை மீட்புக் குழுவினர், இலவச அமரர் வாகனத்தில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லோகநாதனின் மற்றொரு சகோதரி காமாட்சி கூறுகையில், “லோகநாதன் பி.காம் படித்துள்ளான். தினமும் அவனுடன் போனில் பேசுவேன். சனிக்கிழமை மாலை போன் செய்தபோது, அவனது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிந்தது. டிவியை பார்த்தபோது, மழையின் காரணமாக லோகநாதன் வேலை செய்த கட்டிடம் இடிந்து விழுந்திருப்பது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT