Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. நேற்று காலை தங்கச் சப்பரப் புறப்பாடும், இரவு சிம்ம வாகனப் புறப்பாடும் நடைபெற்றன.
இன்று ஹம்ச வாகனமும், சூர்ய பிரபைப் புறப்பாடும் நடைபெறும். நாளை காலை கருட சேவையும், இரவு ஹனுமந்த வாகனப் புறப்பாடும், 12-ம் தேதி காலையில் ரத்னாங்கி சேவையும், மாலையில் சேஷ வாகனப் புறப்பாடும், 13-ம் தேதி காலையில் நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனப் புறப்பாடும், 14-ம் தேதி காலை வெள்ளிச் சப்பரமும், மாலையில் யானை வாகனமும், 15-ம் தேதி தேர் புறப்பாடும் நடைபெறவுள்ளன.
ஜன.16 பிற்பகல் 3.30 மணிக்கு திருமஞ்சனம், இரவு விஜயகோடி விமானமும், பிரம்மோற்சவ கடைசி நாளான ஜன.18-ல் மதியம் த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிவேர் சப்பரமும், த்வஜ அவரோகணமும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT