Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

ஜல்லிக்கட்டு காளையுடன் விளையாடும் 4 வயது பெண் குழந்தை: மதுரை அருகே ஆச்சரியப்படும் கிராம மக்கள்

ஜல்லிக்கட்டுக் காளையுடன் விளையாடும் குழந்தை யுவ அபி.

மதுரை

மதுரை அருகே 4 வயது பெண் குழந்தை, ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் பயமின்றி விளை யாடுவது கிராம மக்களை ஆச் சரியப்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பவர்கள் மட்டுமே அதன் அருகே செல்ல முடியும். மற்ற வர்கள் அருகில் சென்றால் அவர் களை கொம்பால் குத்திவிடும். இதனால் பெரும்பாலும் யாரும் அதன் அருகே செல்வதில்லை.

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை நேரில் பார்ப் போருக்கு அதன் ஆக்ரோஷம் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால், மதுரை அருகே வாடிப்பட்டி தாளம்பட்டியைச் சேர்ந்த வழக் கறிஞர்கள் வினோத் - இலக்கியா தம்பதியின் 4 வயது குழந்தை யுவ அபி, பெற்றோர் வளர்க்கும் ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டித் தழுவுவது, நெற்றியில் முத்தமிடுவது என பயமின்றி அதனுடன் விளையாடுகிறார். பல நேரங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு குழந்தை அபியே தீவனம் வைக்கிறார். இதை பார்த்து ஊர் மக்களே ஆச்சரி யப்படுகின்றனர்.

இதுகுறித்து வினோத் கூறு கையில், எனக்கு யுவ அபி, புகழ் இனியன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் யுவ அபிதான் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு மிகவும் செல்லம். தளபதி, புகழ் என்ற பெயரில் 2 ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்க்கிறேன். இந்த இரண்டு காளைகளும் இதுவரை எந்த ஜல்லிக்கட்டிலும் பிடிபடவில்லை.

பல்வேறு பரிசுகளை வென்று ள்ளன. பக்கத்தில் நெருங்கினாலே மாடுபிடி வீரர்களை புகழ் தூக்கி வீசிவிடுவான்.

தளபதி பக்கத்தில் யாரையும் நெருங்கவே விட மாட்டான். வாடிவாசலில் அவ்வளவு ஆக் ரோஷமாக ஆடுவான். ஆனால், என்னோட மகளை கண்டால் இந்த இரண்டு காளைகளும் குழந்தையைப் போல் மாறிவிடும். ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குத் தீவனம் வைப்பது, தண்ணீர் காட்டுவது என்று குழந்தையை போல் வளர்க்க வேண்டும்.

அதன் பராமரிப்பு சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் குழந்தைகளை கவனிக்க வேண்டும். மற்றொரு புறம் இன்னொரு குழந்தைகளான ஜல் லிக்கட்டு காளைகளைப் பராமரிக்க வேண்டும். சில நேரங்களில் ஒரே நேரத்தில் குழந்தைகளும், ஜல்லிக்கட்டுக் காளைகளும் சாப்பாட்டுக்கு அடம்பிடிப் பார்கள். அப்போது காளைக்கு தீவனம் வைத்துக் கொண்டே குழந்தை அபிக்கும் சாப்பாடு ஊட்டுவோம். அப்படிதான் அபி ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒட்டிக்கொண்டாள்.

தற்போது அபியே காலையில் எழுந்ததும் நேரடியாக ஜல்லிக்கட்டுக் காளை அருகே சென்று அதற்கு வழங் கும் தீவனத்தை கொடுத்து விடு கிறாள். காளைக்குப் பயிற்சி அளிக்கும்போதும் அபியை அழைத்துச் செல்வேன். அதனால் காளைகளுடன் அபி நன்றாக பழகி விட்டாள் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x