Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
திருச்சி சர்வதேச விமானநிலையத் தில் 46 மீட்டர் உயரத்தில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கோபுரம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிவேகமாக வளர்ச்சியடையும் விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.951 கோடியில் புதிய முனையம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 பிப்.10-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி னார். 60,700 சதுர மீட்டரில் அமைக்கப்படும் இந்த புதிய முனையத்தில் ஒரே சமயத்தில் 2,900 சர்வதேச பயணிகள், 600 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும். புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்படுகின்றன.
இதுதவிர 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 10 ஏரோ ப்ரிட்ஜ், 1,000 கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி போன்றவை அமைய உள்ளன. இதற்கான கட்டுமான பணிகள் 40 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ள நிலையில், 2022-ம் ஆண்டு முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இதே வளாகத் தில் நவீன தொழில்நுட்ப வசதிக ளுடன் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன்கூடிய 75 மீட்டர் உயர கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இதற்கு இந்திய விமானநிலைய ஆணையக்குழுமத்தின் தடையில் லாச் சான்று பிரிவின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பல்வேறு கட்டங் களாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்பின், 46 மீட்டர் உயரத்தில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கோபுரம் அமைக்க தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும் போது, ‘‘தடையில்லா சான்று கிடைத்ததைத் தொடர்ந்து, ரூ.100 கோடி செலவில் 46 மீட்டர் உயரத்தில் இக்கோபுரத்தை அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்படும்.
அதன்பின் ஓரிரு மாதங்களில் தொடங்கி, சுமார் 2 ஆண்டுகளுக் குள் இப்பணிகள் நிறைவுபெறும். தற்போதுள்ள முனையம் மற் றும் புதிய முனையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் அமை யும் இக்கட்டிடத்தில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மற்றும் தொழில்நுட்ப வளாகம் ஆகியவை செயல்படும். தற்போதுள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரத்தின் உயரம் 15 மீட்டர் மட்டுமே. புதிய கோபுரம் 46 மீட்டர் உயரத்தில் அமைவதால், அதிலிருந்தபடி விமானநிலைய ஓடுதளம், விமான நிறுத்துமிடம், நுழைவாயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை 360 டிகிரி சுற்றளவில் தெளிவாக கண்காணிக்க முடியும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT