Published : 08 Jan 2021 04:10 PM
Last Updated : 08 Jan 2021 04:10 PM
அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறு என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜன. 08) தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தேர்வுகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல!
2019 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி அஞ்சல்துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாத நிலையில், அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது!
இத்தகைய சூழலில் அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறு. பெரும்பான்மையான போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல்துறை தேர்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தேர்வுகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல!(1/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 8, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT