Published : 03 Jan 2021 09:52 AM
Last Updated : 03 Jan 2021 09:52 AM
கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் வெளியூர் வியாபாரிகள் உத்தமபாளையம் பகுதிக்கு வரவில்லை. நஷ்டத்தை தவிர்க்க சாலையோரங்களில் சில்லறை விலைக்கு விவசாயிகள் விற்கத் தொடங்கி உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஓராண்டு பயிரான கரும்பு தற்போது மகசூல் பருவத்திற்கு வந்துள்ளது. வரும் பொங்கலுக்காக இவை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
பொதுவாக திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களிலும் இருந்து வியாபாரிகள் நேரில் வந்து இவற்றை கொள்முதல் செய்வது வழக்கம். டிசம்பர் மாத தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு முன்தொகை கொடுத்து முன்பதிவு செய்து கொள்வர்.
விளைநிலங்களில் நேரடியாக கரும்புகளை பறித்து 10 கரும்பு கொண்ட கட்டுகளாக கட்டி வெளியூர்களுக்கு கொண்டு செல்வர். கடந்த ஆண்டு விலை மிகவும் குறைந்தது. இந்த ஆண்டு இதுவரை வியாபாரிகள் கரும்பு கொள்முதலுக்கு வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சில்லறை விற்பனை
இது குறித்து விவசாயி அய்யம்மாள் கூறுகையில், கரும்பைப் பொறுத்தளவில் ஓராண்டு முறையாக பராமரித்தால்தான் உரிய லாபம் கிடைக்கும். தற்போது வெளியூர் விவசாயிகள் வராததால் விளைந்துள்ள கரும்புகளை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே நிலத்திற்கு அருகிலேயே குடில் அமைத்து சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.50 என விற்கத் துவங்கி யுள்ளோம். ரேஷனில் வழங்குவதற்காக கூட்டுறவு சங்கத்தில் இருந்தும் இன்ன மும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக 10 எண்ணிக்கை உள்ள ஒரு கட்டு மொத்த விலையில் ரூ.300-க்கு விற்பனையாகும். தற்போது யாரும் கொள்முதல் செய் யாததால் இதன் விலை குறையும் நிலை உள்ளது என்றார்.
விவசாயி மாரியம்மாள் கூறுகையில், விளைந்த கரும்புகளை தோட்டத்திற்குள் புகுந்து சிலர் திருடும் நிலை உள்ளது. எனவே ஒவ்வொரு தோட்டத்திலும் இரவில் கூலிக்கு ஆட்களை தங்கவைத்து இவற்றை பாதுகாத்து வருகிறோம்.
மேலும் அணில், எலி போன்றவை கரும்புகளை சேதப்படுத்தி வருவதால் தகரத்தில் சிறிய குச்சியை வைத்து சப்தம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இவ் வளவு சிரமப்பட்டு வளர்த்தும் பொங்கல் கொள்முதல் எதிர்பார்த்த அளவில் இல்லாதது வருத்தமளிக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT