Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

சென்னை, திருச்சி, நெல்லை மார்க்கங்களில் ஜன.4 முதல் சிறப்பு ரயில்கள்

சென்னை

சென்னை சென்ட்ரலில் இருந்துபெங்களூரு, மைசூரு, திருநெல்வேலி - பாலக்காடு, திருச்சி - ராமேசுவரம் மார்க்கங்களில் வரும் 4-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 4-ம் தேதி முதல் சிலமுக்கிய மார்க்கங்களில் சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன.

புதன்கிழமை தவிர்த்து, வாரத்தின் அனைத்து நாட்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் மைசூரு சதாப்தி சிறப்பு ரயில் (06081) மதியம் 1 மணிக்குமைசூரு செல்லும். மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து (புதன்தவிர) மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06079) மதியம் 1.40 மணிக்கு பெங்களூரு செல்லும். மறுமார்க்கமாக (06080) பெங்களூருவில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

திருநெல்வேலியில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06791) மறுநாள் மதியம் 12.50 மணிக்கு பாலக்காடு செல்லும். மறுமார்க்கமாக (06792) பாலக்காட்டில் இருந்து வரும் 5-ம் தேதி முதல் தினமும் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி வரும்.

திருச்சியில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06849) மதியம் 12.15 மணிக்கு ராமேசுவரம் செல்லும். மறுமார்க்கமாக (06850) ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு திருச்சி வரும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x