Published : 01 Jan 2021 01:44 PM
Last Updated : 01 Jan 2021 01:44 PM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 5 ஆம் கட்ட சுற்றுப்பயணம் தொடர்பாக, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று (ஜன. 01) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டங்களைச் சார்ந்த பொதுநலச் சங்கங்கள் வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுக்கும் உரிய முறையில் அழைப்புகள் அளித்து, அந்தந்த பகுதிகளில், அந்த அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அந்த துறைகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நேரில் தெரிவிக்க கீழே அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திமு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 5 ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம்
2021 ஜனவரி-18 காலை 9.00 மணி - சென்னை வடக்கு
2021 ஜனவரி-18 மாலை 4.00 மணி - சென்னை வடகிழக்கு
2021 ஜனவரி-19 காலை 9.00 மணி - சென்னை கிழக்கு
2021 ஜனவரி-19 மாலை 4.00 மணி - சென்னை தெற்கு
2021 ஜனவரி-20 காலை 9.00 மணி - சென்னை தென்மேற்கு
2021 ஜனவரி-20 மாலை 4.00 மணி - சென்னை மேற்கு
குறிப்பு: காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 9 மணிக்கும்; மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 4 மணிக்கும் தொடங்கப்படும்.
மேற்கண்டவாறு, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விவரத்தையும் கோரிக்கை மனுக்கள் பெறும் இடத்தையும் விளம்பரம் செய்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT