Published : 01 Jan 2021 01:44 PM
Last Updated : 01 Jan 2021 01:44 PM
தமிழகத்தில் 1997-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு செயலர் அந்தஸ்த்திலிருந்து முதன்மைச் செயலர் அந்தஸ்த்துக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வை இன்று தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். தமிழக நிர்வாகத்துறையில் தலைமைச் செயலர் அந்தஸ்த்தில் சண்முகம் ஐஏஎஸ் பதவி வகிக்கிறார். 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர் ஜூலை-2020-ல் ஓய்வுப்பெற்று விட்டாலும் பணி நீட்டிப்பில் உள்ளார். அவருக்கு கீழ் கூடுதல் தலைமைச் செயலர் என்கிற அந்தஸ்த்தில், முதன்மைச் செயலர், இணைச் செயலர் என்கிற அந்தஸ்த்தில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.
இதில் தற்போது 1997-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு செயலர் அந்தஸ்த்தில் இருந்து முதன்மைச் செயலர் அந்தஸ்த்துக்கு உயர்த்தி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்:
1. வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள கார்த்திகேயன் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.
2. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஸ்வர்ணா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.
3. டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 பதவி வகிக்கும் ஆசிஷ் வச்சானி முதன்மைச் செயலராக பதவி உயர்த்தப்பட்டு அதே பதவியில் தொடருகிறார்.
4. டான்ஜெட்கோ தலைவர் மற்றும் செயலர் பங்கஜ்குமார் பன்சார் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்
5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹு முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார்.
6. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பயிற்சி) செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர் சஹய் மீனா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.
7.வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள பீலா ராஜேஷ் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT