Published : 31 Dec 2020 10:49 AM
Last Updated : 31 Dec 2020 10:49 AM
முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்றக்குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கை விடாமல் இருப்பது சரியானதல்ல என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச. 31) தன் ட்விட்டர் பக்கத்தில், "பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்றக்குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கை விடாமல் இருப்பது சரியானதல்ல.
இதனால் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்குப் பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பிரச்சினையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 31, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT