Published : 30 Dec 2020 03:19 AM
Last Updated : 30 Dec 2020 03:19 AM
கரோனா தொற்றுக்கு ரூ.7,544 கோடி செலவிடப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட் டத்தில் 250 இடங்களில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது,“தி.மலையையும் கார்த்திகை தீபத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல் திமுகவை யும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்து திமுகவுடன் வெற்றிக்கு திருவண்ணாமலை மாவட்டம் துணையாக இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் தி.மலை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அண்ணாமலையார் கோயிலை கடந்த 2004-ல் மத்திய தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது, காங்கிரஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கையகப்படுத்தும் முயற்சியை திமுக தலைவர் கருணாநிதி தடுத்து நிறுத்தினார்.
தி.மலை மாவட்டத்துக்கு அதிமுக என்ன செய்துள்ளது. புதிய பேருந்து நிலையம், மேல் செங்கத்தில் தொழிற்பேட்டை, ஆரணியில் பட்டுப் பூங்கா, வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்கப் படும் என்றதெல்லாம் அறிவிப்புடன் இருக்கிறது. அதிமுகவினர் சொன் னதை செய்யமாட்டார்கள். திமுக சொன்னதை செய்யும். பெரியாரின் சீர்திருத்த கருத்துக்களை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அண்ணாதுரை செயல்படுத்தினார்.
அவரை தொடர்ந்து, கருணாநிதி செயல்படுத்தினார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை. மக்கள் கைகளில் அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை பறித்துக் கொண்ட அதிமுக அரசு, பிச்சை பாத்திரத்தை கொடுத்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப் படும் அரிசி, பருப்புகளில் ஊழல். 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பாஜக அரசுக்கு அதிமுக அரசு துணை போனது. இப்படியாக பழனிசாமியின் துரோகத்தை பட்டியலிடலாம்.
ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளர் மற்றும் ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. ஆனால், முதல்வர் பழனிசாமி, மனுக்கள் அனைத்தும் குப்பைக்கு சென்றுவிட்டது என்கிறார்.
தலைமை செயலகத்தை குப்பை தொட்டி என நினைக்கிறாரா?. மக்களை மதிக்க தெரியாதவர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அந்த மனுக்கள் அனைத்தும் தூசி தட்டி எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம் என்கிறார். சுய நலத்துக்காக பாஜகவிடம் அதிமு கவை அடமானம் வைத்து விட்டார் என அக்கட்சியினரே கூறுகின்ற னர். அவரை, முதல்வர் வேட்பாள ராக ஏற்க பாஜக மறுக்கிறது.
மக்கள் உயிரோடு விளையாடாதீர்
கரோனா அச்சம் மீண்டும் ஏற்பட் டுள்ளது. உருமாறிய கரோனா என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவில்லை. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மக்களை எச்சரிக்கிறேன். கடந்த மார்ச் மாதம் இருந்தது போல், இப்போது இருக்க வேண்டாம் என அதிமுக அரசையும் எச்சரிக்கிறேன். பாதிப்பு இருக்காது என முதல்வர் பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கூறுகின்றனர்.
அவர்களது அலட்சியத்தால் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உருமாறிய கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டில் இருந்து தமிழகம் வந்த 800 பேரை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உருமாறிய கரோனா தொற்று இருப்பது ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனகூறி, அதிமுக அரசு தடுப்பு நடவ டிக்கையை எடுக்கவில்லை. கரோனா தொற்றை கட்டுப்படுத்த ரூ.7,544 கோடி செலவிடப்பட்டுள்ள தாக முதல்வர் தெரிவித்துள்ளார். என்ன பணிகளுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT