Published : 27 Dec 2020 11:37 AM
Last Updated : 27 Dec 2020 11:37 AM

மானிய விலையில் சாட்டிலைட் போன்: விசைப் படகு மீனவர்களுக்கு வழங்கப்படுமா?

ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட சாட்டிலைட் போன்

ராமேசுவரம்

மானிய விலையில் வழங்கப்படும் சாட்டிலைட் போன்களை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கும் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், வானிலையில் மாற்றம் நிகழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வயர்லெஸ் ரேடியோ பயன்பாட்டில் இருந்தாலும், இவற்றால் குறிப்பிட்ட 10 கி.மீ. முதல் 20 கி.மீ சுற்று வட்டத் துக்குள் மட்டும் தொடர்புகொள்ள முடியும். இதற்குத் தீர்வுகாணும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் மீனவர்களுக்கு சாட்டி லைட் போன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போனின் விலை ரூ. 1 லட்சம். இவற்றில், 75 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. மீனவர்கள் தரப்பில் 25 சதவீதம் வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு மட்டும் இதுவரை 270 சாட்டிலைட் போன்கள் வழங்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் கூறியதாவது: கடலில் சாதாரண போன்களில் சிக்னல் கிடைக்காது. மேலும் வயர்லெஸ் வானொலி மூலமும் அதிக தூரத்துக்குத் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடலில் விசைப்படகுகளில் இயந்திரக் கோளாறு மற்றும் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கரையில் இருப் பவர்களைத் தொடர்புகொள்ள சாட்டி லைட் போன்கள் பயன்படும் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு இந்த போன்களை மானிய விலையில் வழங்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x