Published : 24 Oct 2015 10:23 AM
Last Updated : 24 Oct 2015 10:23 AM

பொதுமக்கள் மத்தியில் ரூ.500 நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: ரூ.100-க்கு 3-வது இடம்; வாழ்க்கை செலவினம் அதிகரித்துவிட்டதா?

நாட்டில் ரூ.500 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. நாட் டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் 46 சதவீதம் ரூ.500 நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன.

நாட்டில் காய்கறி மார்க்கெட், மளி கைக் கடைகளில் பொருட்களை பொதுமக்கள் வாங்கும்போது, ரூ.500 நோட்டுகளையே கொடுக்கின்றனர். பணத்தை வியாபாரிகள் வங்கியில் செலுத்தும்போதும் அதில் ரூ.500 நோட்டுகள் தான் அதிகமாக உள்ளது.

வங்கிகளில் ரூபாய் நோட்டு கள் புழக்கம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தரவுகளை அடிப்படை யாகக் கொண்டு அசோசெம் என்ற வர்த்தக சபை ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்ப தாவது:

கடந்த மார்ச் 2013-ல் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14.6 சதவீதமாக இருந்த ரூ.500 நோட்டுகளின் புழக்கம், கடந்த மார்ச் 2015-ல் 46 சதவீதமாக உயர்ந்து, வங்கிகளில் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த மார்ச் 2013-ல் 5.9 சதவீதமாக இருந்த ரூ.1000 நோட்டுகளின் புழக்கம், தற்போது 39.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரூ.100 நோட்டு புழக்கம் 10.5 சதவீதமாக குறைந்துள்ளது. ரூ.50 நோட்டு புழக்கம் 4.7 சதவீதத்தி லிருந்து 1.2 சதவீதமாகவும், ரூ.20 நோட்டு புழக்கம் 5.2 சதவீதத் திலிருந்து 0.6 சதவீதமாகவும் குறைந் துள்ளது. நாணய புழக்கத்தை பொருத்தவரை 33 சதவீதத் துடன் ரூ.5 முதலிடத்திலும், 27.8 சதவீதத்துடன் ரூ.2 நாணயங்கள் 2-ம் இடத்திலும் உள்ளன.

ரூ.500 நோட்டுகள் அதிகம் புழுங்குவதற்கான காரணங்கள் குறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரி எம்.தியாக ராஜன் கூறும்போது, “ரூ.500 நோட்டு களை விட ரூ.1000 நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகம். வியாபார பரபரப்பில் அதை கவனிக்க முடி யாது. இதனால் வியாபாரிகளுக்குத் தான் இழப்பு. ரூ.100 நோட்டுகளை அதிக எண்ணிக்கையில் கையாள வேண்டும். அதனால் அவ்விரு நோட்டுகளையும் தவிர்த்து, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த விரும்புகிறோம். எங்களிடம் பொருட்களை வாங்கும் வியாபாரி களும் ரூ.500 நோட்டுகளைத்தான் தருகிறார்கள்” என்றார்.

தேங்காய் வியாபாரி ஏ.கே.மகேந்திரன், “ரூ.1000 நோட்டுகள் கள்ளப் பணமாக பதுக்கி வைக் கப்பட்டுள்ளன. அதனால் அவை புழக்கத்துக்கு வராமல், அதற்கு அடுத்த நிலையில் உள்ள ரூ.500 நோட்டுகள் அதிக புழக்கத்தில் உள்ளன” என்றார்.

காய்கறி வாங்க வந்த விருகம் பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.பிரபாவதி, “தற்போது வாழ்வதற்கான செல வினம் அதிகரித்துவிட்டது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. கடை களுக்குச் செல்ல ரூ.100 நோட்டு களை அதிக எண்ணிக்கையில் கொண்டுவர வேண்டும். ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு வந்தால், வியாபாரிகள் சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளது. ரூ.500 நோட்டுகள் பல விதங்களில் வசதியாக உள்ளன” என்றார்.

ஆவடியைச் சேர்ந்த கே.வாசுகி, கூறும்போது, “ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது ரூ.500 நோட்டுகள்தான் அதிகளவில் வருகிறது. இதனால், கடைகளுக் குச் செல்லும்போது 500 ரூபாய் நோட்டுகளைத்தான் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது விலை வாசி உயர்வால், ரூ.100 கொடுத்து நமக்குத் தேவையான பொருளை வாங்க முடிவதில்லை. இதற்காகவே ரூ.500 நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.

புரசைவாக்கத்தில் உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியின் அதி காரி ஒருவர் கூறும்போது, “ரூ.1000 நோட்டுகளில் சிறு சேதம் இருந்தா லும் அதை வியாபாரிகள் வாங்கு வதில்லை. அதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது ரூ.500 நோட்டாக கொடுங்கள் என்றே கேட்டு வாங்குகின்றனர்.

எங்கள் வங்கியில் தினமும் 75 சதவீதம் ரூ.500 நோட்டுகளும், 15 சதவீதம் ரூ.1000 நோட்டுகளும், 10 சதவீதம் இதர நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x