Published : 25 Dec 2020 06:34 PM
Last Updated : 25 Dec 2020 06:34 PM
மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வந்தால் வாழ்த்துகள் என, பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அவர் சிவகங்கையில் இன்று (டிச. 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எங்களது மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் புதுடெல்லியில் வேலுநாச்சியாருக்கு மரியாதை செய்தபிறகே பதவியேற்றார். நமது பாடப்புத்தகத்தில் கால்டுவெல், முகலாய பேரரசு பற்றி உள்ளது. ஆனால், வேலுநாச்சியார், ராஜராஜசோழனை பற்றி இல்லை. அவர்களை பற்றி நாம் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை.
ஆகவே தான் பாஜக தேர்தல் அறிக்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. பாடத்திட்டங்களில் நம்முடைய வரலாறுகள் இடம்பெறும்.
ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என எந்த கூட்டம் நடத்தினாலும் முதல்வராகும் வாய்ப்பு இல்லை. அது அவருடைய ஜாதகத்திலும் இல்லை. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
மு.க.அழகிரி நேரடி அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருக்கு வாழ்த்துகள். மத்திய அரசு மார்ச் முதல் நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வீதம் வழங்கியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் தடுமாறி கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் மீண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கே தற்காலிக தலைவி தான் இருக்கிறார். தன் கட்சியை நடத்துவதற்கே வழியில்லாத ராகுல், பிரதமரை பற்றி பேசுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அருகில் சிவகங்கை தேர்தல் பொறுப்பாளர் மேப்பல் சக்தி உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT