Published : 24 Dec 2020 10:06 AM
Last Updated : 24 Dec 2020 10:06 AM

இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவற்றினை சீரமைக்க நிதி ஒதுக்கீடு; முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச் சுவற்றினை சீரமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 24) வெளியிட்ட அறிக்கை:

"கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் சிதம்பரத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது பொதுமக்கள் இச்சுற்றுச்சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர், ரூபாய் 2.62 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது முஸ்லிம் மக்கள் இத்தடுப்புச் சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையினை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறதடுப்புச் சுவர், ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x